255
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழ் ஊடக அமையத்தில் இன்று நண்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் சத்தியமூர்த்தி அவர்களுடனான அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.ஊடகத்துறையில் 1990களில் இருந்து ஈடுபடத் தொடங்கிய இவர், 2009 பெப்ரவரி 12ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் சிக்கி படுகாயமுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Spread the love