யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் காய்ச்சலினால் பாதிக்கக்கப்பட்ட குறித்த மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ள அவா் டெங்கு தாக்கத்தினாலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
மாணவன் கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில் பரீட்சை முடிவுக்காக காத்திருந்த, 175 விட மிகச் சிறந்த புள்ளிகளை பாடசாலை மட்டத்தில் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மிக திறமை வாய்ந்த மாணவன் என அவர் கல்வி கற்ற பாடசாலையினா் தெரிவித்துள்ளனர்.