Home பிரதான செய்திகள்அமெரிக்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஜோகோவிச் விலகல்

அமெரிக்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஜோகோவிச் விலகல்

by admin

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வரும் செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கொரோனா விதிமுறைகள் காரணமாக அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரபலமான இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நேற்றையதினம் ஆரம்பமானதுடன் மியாமி ஓபன் டென்னிஸ் 23ம் திகதி ஆரம்பமாகின்றது. இந்த போட்டிக்கான வீரர்களின் பட்டியலில் உலகின் 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 

எனினும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் அவர் அங்கு கடைபிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள் காரணமாக அமெரிக்காவுக்கு செல்ல இயலாது என்பதால் இவ்விரு போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்

அமெரிக்கர் அல்லாத ஏனைய நாட்டினர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே இதே பிரச்சினையால் அவுஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள சென்ற ஜோகோவிச் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More