சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் மொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன் நாட்டை சேர்ந்த ஏழு பேரும் சிரியா நாட்டை சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனா் இவர்கள் பயங்கரவாதம் உட்பட பல்வேறு கொடூரமான குற்றங்களை புரிந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிலர் ஐஎஸ், அல் கெய்தா அல்லது ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பல தருணங்களில் முறையான விசாரணைகள் நடைபெறுவதில்லை என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ள போதிலும் இந்த குற்றச்சாட்டுகளை சவுதிஅரசு மறுத்துள்ளது