Home இலங்கைவேலணையில் தாய் மற்றும் மகள் மீது கத்திக்குத்து – குத்தியவரும் தற்கொலைக்கு முயற்சி!

வேலணையில் தாய் மற்றும் மகள் மீது கத்திக்குத்து – குத்தியவரும் தற்கொலைக்கு முயற்சி!

by admin

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகியோர் மீது நபர் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு , தானும் அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த அயலவர்கள் மூவரையும் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More