Home இலங்கையாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது – ஒருவர் கொலன்னாவ வாசி!

யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது – ஒருவர் கொலன்னாவ வாசி!

by admin

யாழ்ப்பாணம் இளவாலை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் – கலட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (15.03.22) இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

காவற்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் பனிப்புலம் – கலட்டி பகுதியில் உள்ள வீடொன்றினை காவற்துறையினர் முற்றுகையிட்டிருக்கின்றனர்.

இதன்போது வீட்டில் 1கிராம் 70,மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. குறித்த கெரோயினை போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதான பெண் ஒருவரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கையின்போது சங்கானையை சேர்ந்த 27 வயது இளைஞனும், கொலன்னாவ வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More