வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில் இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சம்மாந்துறை காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமத்தில் இரகசிய தகவல் ஒன்றை அடுத்து காவல்துறையினா் வியாழக்கிழமை (17) மாலை கைது செய்தனர்.
கைதான மலையடிகிராமம் – 4 இனை சேர்ந்த 33 வயதான நபர் வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்சாடிகளுடன் இணைத்து குறித்த இரு கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

