யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவு நாக விகாரை மற்றும் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
பிரதமரின் வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததுடன் காவல்துறையினரும் இராணுவத்தினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்..
இதேவேளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் நயினாதீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அமைச்சருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மகிந்த ராஜபக்ஸவின் நாகவிகாரை பயணத்தின் போது அமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.