ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், குறித்த சலுகையை இலங்கை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாமென ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை விடயங்களை காரணங்காட்டி, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை இடைநிறுத்தியிருந்த ஐரோப்பிய ஒன்றியம் நல்லாட்சியில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களைத் தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் அதனை வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகளை பாதுகாத்தல், நீதிமன்றங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தல், ஊழல் மோசடிகளை ஒழித்தல் உள்ளிட்ட 11 நிபந்தனைகளை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அவற்றை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு முன் நிறைவேற்றாவிட்டால் அச் சலுகை வழங்கப்படாதென எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பிரான்ஸின் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால் இலங்கைக்கு குறித்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் குறித்த நிபந்தனைகளை றிறைவேற்றத் தவறினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை நிரந்தரமாக இழக்கும் அபாயமுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.