மூதூர், மலையடிப் பிள்ளையார் கோவில் நிர்மாணத்தில் இருந்து வந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் அமைப்பதற்கான காணி, நேற்று (22.03.22) காலை வழங்கி வைக்கப்பட்டது.
மூதூர், 64 ஆம் கட்டை மலையடி பகுதியில் பல வருடங்களுக்கு மேலாக மலையடிப் பிள்ளையார் கோவில் இருந்து வந்தது.
இந்நிலையில், இக் கோவிலை புதிதாகக் கட்டுவதற்கு மூதூர் பிரதேச இந்துக் குருமார் சங்கத்தினர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் முயற்சித்தனர். அப்போது காணிக்கான ஆவணங்கள் இல்லையென மூதூர் பிரதேச செயலாளர் கோவில் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினார். இதன்பின்னர் பல முறுகல் நிலை ஏற்பட்டு, பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், மூதூர் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூதூர் பிரிவு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர் உள்ளிட்டோர் நேற்று வருகைதந்து, மூதூர் பிரதேச இந்துக் குருமார் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, காணியை வழங்கி வைத்தனர்.
14 அடி நீளமும், 14 அடி அகலமும் கொண்டதாக மூதூர் மலையடிப் பிள்ளையார் கோவிலை அமைப்பதற்கு காணி கையளிக்கப்பட்டுள்ளதாக ,மூதூர் பிரதேச இந்துக் குருமார் சங்கத் தலைவர்