Home இலங்கைமனைவியுடன் முரண்பாடு – எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொளுத்தி உயிர்மாய்க்க முயன்றவா் கைது

மனைவியுடன் முரண்பாடு – எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொளுத்தி உயிர்மாய்க்க முயன்றவா் கைது

by admin

குடும்பத் தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 


யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் மதுபோதையில் , கையில் பெற்றோல் போத்தல் ஒன்றுடன் வந்து , தனக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு என்றும் அதனால் தான் மனமுடைந்துள்ளதாக கூறி , தான் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை தீயிட்டு கொளுத்தி , தானும் உயிர் மாய்க்க போறேன் என்றுள்ளார். 


அவரை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் , அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்ற போது , அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அட்டகாசம் புரிந்துள்ளார். 
அது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் அவரை கைது செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More