ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதலொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னரும் ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பசில் ராஜபகக்ஸ ஆகியோர் தலையிட்டு அதனைத் தீர்த்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றமை தொடர்பில் தற்போது மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இக்கருத்து மோதல் அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.