184
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கை சேர்ந்த சீ . ரவீந்திரன் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கைதடி – கோப்பாய் வீதியில் கைதடி கலைவாணி வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – சைக்கிள் விபத்தில் சைக்கிளில் சென்ற குறித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love