குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மற்றும் பங்காளதேஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் விரைவில் வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் வர்த்தக விவகார அமைச்சர் டொபாய்ல் அகமட் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளினதும் அமைச்சு செயலாளர் மட்டத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஸிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருடனான நேற்றைய தினம் நடத்திய சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஸ் உற்பத்திகளை மூன்று தினங்களுக்கு கொழும்பு துறைமுகத்தில் தரித்து வைப்பது தொடர்பிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் மருந்துப்பொருட்கள் மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களை குறைந்த வரியில் பங்களாதேஷில் இருந்து ஏற்றுமதிசெய்ய முடியும் பங்களாதேஸ் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.