குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என சர்வதே உண்மை மற்றும் நீதித் திட்டம குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையில் சித்திரவதைகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் , சாட்சியங்கள் மற்றும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் தேசிய அதிகாரசபையில் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இரண்டு நியமனங்கள் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய சாட்சிகளை பாதுகாக்கும் முறைமையின் கீழ் சாட்சியாளர்களும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரும் தைரியமாக பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக சாட்சியமளிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த அரசாங்கம் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவே முனைப்பு காட்டி வருகின்றது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.