Home இலங்கைபசிலுக்கு கடுமையான ஏச்சாம்! உள்வீட்டில் முரண்பாடு உக்கிரமாம்!

பசிலுக்கு கடுமையான ஏச்சாம்! உள்வீட்டில் முரண்பாடு உக்கிரமாம்!

by admin

அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்படுகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தங்களுடைய இராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். எனினும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட மறுத்துவிட்டார் என அறியமுடிகின்றது.

அத்துடன், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன ஆகியோரும் கையொப்பம் இடவில்லையென தெரியவருகிறது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையாக திட்டியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபகக்ஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று (04.04.22) காலை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More