Home இந்தியா1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேற்பட்ட, வெளிநாட்டு அணு உலைகளை நிறுவ, இந்திய அரசு முடிவு:-

1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேற்பட்ட, வெளிநாட்டு அணு உலைகளை நிறுவ, இந்திய அரசு முடிவு:-

by admin

அணு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இனிமேல் 1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேற்பட்ட வெளிநாட்டு அணு உலைகளை நிறுவ இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட வெளிநாட்டு அணு உலைகளை ஏற்கெனவே நிறுவி உள்ளதாகவும் இனிமேல் 1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேற்பட்ட அணு உலைகள் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தை அடிப் படையாகக் இந்த அணுஉலைகள் மூலம் கூடுதலாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் கூடங்குளம் பகுதியில் ரஷ்யாவின் கூட்டு முயற்சியுடன் அணு மின் நிலையம் நிறுவப்பட்டு வருகின்ற நிலையில் ஆந்திர மாநிலம் கவாலியில் இடம் ஒதுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் அமெரிக்க நிறுவனம் சார்பில் ஆந்திராவில் அமைய உள்ள 6 அணு உலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது எனவும் மகாராஷ்டிர மாநிலத்திலும் 6 அணு உலை கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More