பாலியல் தொழில் சட்ட ரீதியாக்ககப்படாது என அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ஓருபால் திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும், பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் தொழிலை இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியாக்க மாற்ற உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் இவ்வாறு பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்க முயற்சிக்கின்றது என சிலர் பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பால் நோய்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும், அது குறித்து போதியளவு விழிப்புணர்வு ஏற்படுது;தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.