Home இலங்கைமன்னாரில் அரசுக்கு எதிராக போராட்டம் :

மன்னாரில் அரசுக்கு எதிராக போராட்டம் :

by admin


அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை (8) காலை    மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றது.

சிவில் அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் இணைந்து குறித்த கண்டன போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அரசின் தூர நோக்கற்ற  நிதி நிர்வாக முகாமைத்துவத்தால்  நாடு பெரும் பொருளாதார பின்னடைவு டன்  பட்டினிச்சாவை நோக்கியுள்ளது.


 இதனை கண்டித்து மன்னாரில் தன்னிச்சையாக ஒன்று கூடிய பொதுமக்கள் இளைஞர் யுவதிகள் பாடசாலை மாணவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அரசுக்கு எதிராக பல  கோஷங்களை எழுப்பியவாறு  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், பொருட்களுக்கு தட்டுப்பாடு,   எரிபொருட்கள் எரிவாயு தட்டுப்பாடு ,   தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்தல், பொது மக்களுக்குச் சொந்தமான காணியை இராணுவம் அபகரிப்பு தொடர்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More