Home இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் குறித்து பிரதமருக்கும் ராஜிதவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் குறித்து பிரதமருக்கும் ராஜிதவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சியை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தாம், பிரதமரிடம் கோரியதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பழைய முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தின் ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தை மேற்கொள்ள முன்னதாக இவ்வாறு சந்திப்பு நடத்தியதாகவும் வன்முறைகளில் ஈடுபடவோ அல்லது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடவோ சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More