Home இலங்கைகேப்பாபுலவு மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என கோரி வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்

கேப்பாபுலவு மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என கோரி வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கேப்பாபுலவு மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு வடமாகாண சபையால் இன்று, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவில் 524 ஏக்கர் தனியாருக்குரிய காணிகள் விடுவிக்கபட வேண்டும். அவற்றில் 243 ஏக்கர் காணி கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், அது விடுவிக்கப்படவில்லை.

இப்பகுதிக்குரிய 84 குடும்பங்களில் 54 குடும்பங்களிடம் தமது காணிகள் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன. எனவே, இவற்றை கவனத்தில் கொண்டு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More