Home இலங்கைரம்புக்கனையில் ஊரடங்கு நீக்கம்

ரம்புக்கனையில் ஊரடங்கு நீக்கம்

by admin

ரம்புக்கனையில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று(21) காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அங்கு கடந்த 19ம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தினால் காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இந்த சம்பவத்தில் மொத்தம் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

சுமார் 15 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையின் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததனையடுத்து, ஏற்பட்ட கலவரத்தின தொடா்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறையின ர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாககாவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிக்கு குழுவொன்று எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முற்பட்ட போது குழுவினரை கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ரம்புக்கனை சேர்ந்த டொன் சமிந்த லக்ஷான் (42) என்பவா் உயிாிழந்துள்ளாா்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More