அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழக்கற்கைகள் துறை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏற்கனவே மொழிக் கறகைகள் துறையின் ஒரு பிரிவாக தமிழிப்பாட நெறி இருந்தது, இப்போது அது தமிழகறகைகள் துறை என ஓர் புதுத்துறையாக மலர்ந்துள்ளது, இலங்கையில் தமிழ்க் கற்கைகள் துறை எனவோர் துறையை ஆரம்பித்த பெருமையை கிழக்குப் பல்கலைக்கழச்கம் பெறுகிறது.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழி, இலக் கியம் பயிற்றும் நெறி ஆரம்பிக்கப்பட்டமைக்கும் அது இன்றுவரை வளர்ச்சியடைந்து வந்தமைக்கும் அது இன்று தமிழ்க் கற்கைகள் துறையாக மலர்ந்தமைக்கும் ஒரு நீண்ட வரலாறுண்டு.
1991 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித் துறையும் சமூக விஞ்ஞானத் துறையும் ஆரம்பிக்க, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அனுமதி வழங்கியது அதற்கமைய மொழித் துறையின் கீழ் தமிழ் பயிற்றுவதற்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது என்னையே அன்று பல்கலைக்கழகம் மொழித் துறைத் தலைவராக நியமித்திருந்தது எனவே பாடத்திட்டம் தயாரிக்கும் பொறுப்பும் என்மீது விழுந்தது, பேரா,சிவத்தம்பி பேரா தில்லைநாதன் ஆகியோரின் ஆலோசனைபெற்று அப்பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது எனக்கு உதவியாக அன்று தகுதிகாண் விரிவுரை யாளராக இருந்த இன்றைய பேராசிரியர் செ. யோக ராஜா உதவினார் அதில் நாங்கள் கிழக்குமாகாண இலக்கியங்களையும் இணைத்துக் கொண்டோம்.
முக்கியமாக மருதமுனைக் கவிஞர் ஜனாப் செரிபுதீனின் நபிமொழி நாற்பது காத்தான்குடி கவிஞர் அப்துல்காதர் லெவ்வையின் செய்நம்பு நாச்சியார் மான்மியம் நீலாவணன் கவிதைகள் என்பன பாட நூல்களாகக் கற்பிக்க அப்பாடத்திட்டம் வழி வகுத்தது.
கிறிஸ்தவ இலக்கியங்களும் அறிமுகம் செய்யப் பட்டன
அப்பாடத்திட்டம் செனட்சபையால் ஏற்கப்பட்டு தமிழ்ப் பாடநெறி ஆரம்பிக்க அனுமதியும் வழங்கப்பட்டது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அன்று அதாவது 1991 இல் தமிழ் கற்கை நெறி ஆரம்பமாகிய கதை இது பின்னர் அது வளர்ச்சி காண ஆரம்பித்தது. பேராசிரியை சித்திரலேகா எனக்குப்பின் கிழக்குப் பல்கலைக்க்ழகத்தில் இணைந்து கொண்டார். மொழித்துறைத் தலைவருமானார் அவர் காலத்தில் மொழித்துறை சிறப்பாகத் தமிழ்ப் பாட நெறி இன்னும் பல பரிமாணம் பெற்றது.
புதிதாக
தென்னாசிய இலக்கியம்,
தமிழில் பெண்கள் இலக்கியம்,
மூலபாடத் திறனாய்வு
ஒலிபரப்புக்கலையும் மொழியும்
நாட்டார் இலக்கியம்
என்ற புதிய பாடநெறிகள் அறிமுகம் செய்யப்பட்டன
பேராசிரியை சித்ரலேகாவின் பின்னர் அத்துறையின் தலைவர்களாக
பேராசிரியர் அம்மன்கிளிமுருகதாஸ்
பேராசிரியர் யோகராஜா
கலாநிதி நதீரா மரியசந்தனம்,
ரூபிவலன்டீனா
பேராசிரியர் கென்னடி
ஆகியோர் பணிபுரிந்தனர்.
அவர்கள் காலத்தில் அது இன்னும் வளர்ச்சி பெற்றது இப்போது அங்கு தமிழ் பயின்ற முதல் தொகுதி மாணவருள் ஒருவரான பேராசிரியர் சந்திரசேகரன் தலைவராக இருக்கிறார்
கிழக்குப்பல்கலைக்கழகத்தில் நான் உட்பட ஆறு பேராசிரியர்கள் பணி புரிந்த ஒரேயொரு துறை மொழித்துறையே.
இவ் ஆண்டுடன் மொழித்துறை அது தனது 30 ஆவது ஆண்டைப் பூர்த்தி பண்ணி 31 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது, மொழித்துறையில் ஒரு பிரிவான தமிழ்ப்பாடநெறி கடந்த 30 வருட காலத்தில் மெல்ல மெல்ல பரந்து வளர்ந்து வந்துள்ளது, அது காலத்தோடு ஒட்டிய வளர்ச்சி தமிழ் மொழியினையும் அதன் இலக்கிய இலக்கணங் களையும் அதன் மரபு நிலையிலும் நவீன பார்வையிலும் கற்பிப்பதே அதனை வழி நடத்திய அனைவ ரதும் நோக்காக இருந்தது
அதாவது மரபும் நவீனமும் இணைந்த தமிழ்க் கல்வி இலங்கைப் பல்கலைக்க்ழகங்களில் தமிழ் பாடநெறி வளர்ந்து வந்தமைக்கு ஒரு வரலாறுண்டு.
தமிழை இலக்கிய இலக்கண கற்கை நிலையினின்று மாற்றி அதனை கால ஆராய்ச்சி பின்னணியிலும் அரசியல் சமூகப் பின்னணியில் கற்பிக்க ஆரம்பித்த பெருமை இலங்கைப்பலகலைக் கழகதிற்கு முக்கிய மாக பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கேயுண்டு
இதன் முதல் தலைவராக இருந்த சுவாமி விபுலானந்த அடிகள் தமிழை ஆய்வு ரீதியாகவும் ஒப்பீட்டு முறையிலும் பரந்த பின்னணியிலும் அணுகுவதற்கான முறைக்கு அடித்தளமிட்டு பாடநெறியமைத்து ஆரம்பித்து வைத்தார்.
அதற்கு அனுசரணையாக திராவிட நாகரிகம், சாசன கற்கை என்பனவும் பின் வந்தோரால் இணைக்கப்பட்டன இவற்றைச் செய்தது முக்கியமாக பேராதனைப் பல்கலைக்கழகம்
பின்னர் தமிழ்த் துறையில்
ஈழத்து இலக்கியம்
மூலபாடத் திறனாய்வு
போன்ற புதிய நெறிகளையும் இணைத்துகொண்டது கொழும்புப்பல்கலைக்க்ழகம்
அவற்றோடு
நாட்டார் இலக்கியம்
வரலாற்று இலக்கணம்
ஆகியவற்றையும் இணைத்துகொண்டது யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
இவற்றோடு சேர்த்து
தென்னாசிய இலக்கியம்,
தமிழில் பெண்கள் இலக்கியம்,
ஊடகக் கற்கை நெறி
இதழியல் கற்கைகள்
என இன்னும் அகட்டியது கிழக்குப்பல்கலைக்கழகம்.
இவ்வகையில் பின்னர் வந்த கிழக்குப் பல்கலைக் க்ழகத்திற்குத் தமிழ் கற்கையினை காலத்தோடு ஓட்டிய வகையில் வளர்த்தெடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது எனலாம் இத்துறையின் தலைவர்களாக கிழக்குப் பல்கலை மொழிதுத்றையில் தொடர்ந்து இருந்தவர்களில் அவர்கள் பயின்ற பல்கலைக்கழகங்களின் தாக்கம் இருந்தது அது இயல்பே நான் பேராதனைப் பல்கலைக்கழக மரபில் பயின்றவன் சித்திரலேகா, யோகராஜா ஆகியோர் கொழும்புப் பல்கலைக் கழக மரபில் வந்தவர்கள் அம்மன் கிளி நதிரா, ரூபிவன்டினா ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மரபில் வந்தவர்கள் இன்றைய இதன் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரன் கிழக்குப் பல்கலைக்க்ழக மரபில் வந்தவர்.
இவ்வண்ணம்
பேராதனை,
கொழும்பு,
யாழ்ப்பாணம்
கிழக்கு
பல்கலைக்க்ழகங்கள் என நான்கு பல்கலைக்க்ழக தமிழ் மொழி பயிற்றும் மரபை ஓரிடத்தில் இணைக்கும் வாய்ப்பை கிழக்குப் பல்கலைக்கழகம், பெற்றது அத்தோடு அது புதிய போக்குகளையும் அது இணைத்தும் கொண்டது இதனால் செழுமையான ஒரு பாட நெறியாக
தமிழ்ப் பாடநெறியினை வளர்க்கும் வாய்ப்பை கிழக்குப் பல்கலைக் கழகம் பெற்றது எனலாம்
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அன்று 1960 களில் பேராசிரியர்களான
கணபதிப்பிள்ளை,
வித்தியானந்தன்,
செல்வநாயகம்
கைலாசபதி,
வேலுப்பிள்ளை
தில்லைநாதன்
சதாசிவம்
தனஜ்செயராஜசிங்கம்
அகியோர் தமிழ் தமிழ்துறையில் விரிவுரையாளர்களாக இருந்தனர்
கொழும்புப்பல்கலைக்கழகத்தில் 1970 களில்
பேராசிரியர்களான
கைலாசபதி,
செல்வநாயகம்
சதாசிவம்
பூலோகசிங்கம்
பாலசுந்தரம்
போன்றோர் விரிவுரையாளர்களாக இருந்தனர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1970களின் பிற்பகுதியில் பேராசிரியர்களான
கைலாசபதி
சிவத்தம்பி
, வேலுப்பிள்ளை,
சண்முகதாஸ்,
சித்திரலேகா
நுஹ்மான்,
பாலசுந்தரம்
சுப்பிரமணிய ஐயர்
, சிவலிங்கராஜா
ஆகியோர் விரிவுரையாளர்களாக இருந்துள்ளனர்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1991 களிலும் அதன் பின்னரும் பேராசிரியர்களான
மௌனகுரு,
சித்திரலேகா,
யோகராஜா,
அம்மன்கிளி
மற்றும் நதீரா , ரூபி வலன்டீனா ஆகியோர்
விரிவுரையாளர்களாக இருந்துள்ளனர்
இவ்வகையில் கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பாட நெறி
பேராதனை,
கொழும்பு,
யாழ்ப்பாணம்
கிழக்கு பல்கலைக் கழகங்களின் அனுபவச் சாறு எனலாம்.
முன்னோரின் தன்மையினை அப்படியே பிரதி பண்ணாது பின்னர் தமிழியல் ஆய்வில் உருவான
புதிய சிந்தனைப்போக்குகளையும் வளர்ச்சி பெற்ற புதிய ஆய்வுமுறைகளையும் சமகாலச் சிந்தனைகளின் பின்னணியில் தமிழ் இலக்கியங்களைப் புரிந்துகொள்ளும் முறையையும்
உள்வாங்கி உருவாக்கப்பட்டதே கிழக்குப் பலகலைக்க்ழக தமிழ்ப் பாட நெறியாகும்
அதன் சிறப்பம்சமே இப் பன்முகப்பண்புதான், இப்பாட நெறியினைப் பயின்ற மாணவர் பலர் இன்று பலர் தத்தம் துறைகளில் சிறப்பாக வேலை செய்துகொண்டுள்ளனர். பலர் ஆய்வாளர்களாகவும் நூலாசிரியர்களாகவும் பரிணமித்துள்ளனர் இப்பின்னணியில் இதனை தமிழியல் கற்கை நெறியாக மாற்றும் திட்டம் ஏற்கனவே இத்துறை தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு இன்று அது காரியசாத்தியமாகியுள்ளது\ தமிழ் கற்கைகள் நெறியினை உருவாக்க பலர் முன்னெடுப்புகள் செய்துள்ளனர்,
கிழக்குப் பல்கலைக்க்ழகத்தில் கலைப்பீடாதிபதிகளாகப் பணி புரிந்தோரின் ஆதரவுகளும் இம்முன்னெடுப்புக்கு உதவியுள்ளன என்பதனையும் இங்கு குறிப்பிடுதல் அவசியம்
இது பலரின் முயற்சி ஆகும், அனைவருக்கும் என் வாழ்த்துகள் இனி வரும் காலத்தில் தமிழ்க்கற்கை நெறியினை இன்னும் ஆழமாக முன்னெடுக்கும் விதத்தில் அதன் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். அப்பாரிய பொறுப்பு இன்றுள்ள இளம் தலைமுறைக்கு உண்டு
மானிடவியல்
சமுகவியல்
உளவியல்
அகழ்வாய்வியல்
இனவரைவியல்
பின்காலனிய ஆய்வு
விழிம்பு நிலை ஆய்வு
எனும் நவீன துறைகள் இன்று வெகுவாக வளர்ந்து விட்டன பல்துறை ஆய்வுச் சங்கம அணுகுமுறையில் (Multi Dicipilanary Approach) அனைத்தையும் நோக்கும் பண்பாட்டு பாடநெறி (Cultural studies) இன்று பிரதான போக்காக உலகப் பல்கலைக் க்ழகங்களில் வளர்ந்துள்ளது இப்போக்குகளை உட்செரித்து தமிழை நோக்குதல் மேலும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் பேசும் சமூகத்தையும் புரிந்துகொள்ள உதவும்
\
உள் நாட்டு ஆய்வாளராலும், தமிழ் நாட்டு ஆய்வாளராலும் வெளி நாட்டு ஆய்வாளராலும் அண்மைக்க்காலமாக இம்முறையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிறைய ஆழமான ஆய்வு நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துமுள்ளன அவற்றையும்இன்றைய தேவைகளையும் உள்வாங்கி
கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்க் கற்கைகள் நெறியின் புதிய பாடத்திட்டம் அமையும் என நம்புவோமாக இறுதியில் என்னால் அன்று இரண்டு வேண்டுகோள்கள் அங்கு முன் வைக்கப்பட்டன
- இத்துறைக்கு என தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆய்வு நூல்கள் கொண்ட சிறப்பான ஒரு நூல் நிலையம் இத்துறைக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட வேண்டும்
- மேற்கு நாட்டில் சில பல்கலைக்கழகங்களில் இருப்பது போல கிழக்குப் பல்கலைக்க்ழகத்தில் ப்ணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்காக ஓர் அறை ஒதுக்க்ப்பட்டு அவர்களை அழைத்து அவர்கள் ஆய்வு அனுபவங்களை மாணவர் பெற ஒழுங்கு செய்யப்படவேண்டும்.
இத்துறையில் காத்திரமான பணிசெய்யும் ஏனைய பேராசிரிய்ர்களையும் அழைக்க வேண்டும்
நூல்நிலையத்தை ஆரம்பிப்பதற்கு ஓர் அடையாளமாக எனது சில நூல்களை என் சார்பிலும் சித்ரலேகா சார்பிலும் அன்பளிப்பாக வழங்கினேன்
அவற்றை கலைப்பீடாதிபதி
பேராசிரியர் கெனடியும்
மொழித்துறைத் தலைவர்
பேராசிரியர் சந்திரசேகரனும்
பெற்றுக்கொண்டனர்
மகிழ்ச்சிகரமான கணங்கள் அவை