Home இலங்கைஆலய முன்றலில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மறுநாள் அதே ஆலயத்தில் மீட்பு

ஆலய முன்றலில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மறுநாள் அதே ஆலயத்தில் மீட்பு

by admin

மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில்  விட்டு விட்டு ஆலய தரிசனத்தில் ஈடுபட்டவரின் மோட்டார் சைக்கிளில் திருடப்பட்டிருந்த நிலையில் மறுநாள் அதே ஆலய வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.  இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


யாழ்ப்பாணம் அராலி வீதியில் , கல்லுண்டாய் வெளி ஊடாக கடந்த ஞயிற்றுக்கிழமை பயணித்த இளைஞன் ஒருவர் அப்பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு முன்பாக தனது மோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் நிறுத்தி விட்டு , வைரவரை தரிசனம் செய்துள்ளார். 
அவ்வேளையில் அவரது மோட்டார் சைக்கிளை இளைஞன் ஒருவர் திருடிக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளாா். 


அது தொடர்பில் மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 
இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் திருடப்பட்ட வைரவர் ஆலயம் முன்பாக , திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் அநாதரவான நிலையில் காணப்பட்டுள்ளது. 
அது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து ,காவல்துறையினா் மோட்டார் சைக்கிளை மீட்டு சென்றுள்ளனர்.  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More