Home இலங்கை நந்தலாலை ஜூலி சங் சந்தித்தார்!

நந்தலாலை ஜூலி சங் சந்தித்தார்!

by admin

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார்.

தொழில்முறை சார் மற்றும் சுதந்திரமான இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடு பொருளாதார மீட்சிக்கு அவசியமானது.

நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கான உள்ளூர் மற்றும் பலதரப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் வழிகளை ஆராய்வது குறித்து இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More