Home இந்தியாபன்னீர்ச்செல்வத்துக்கு ஆதரவளித்தவர்கள் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்

பன்னீர்ச்செல்வத்துக்கு ஆதரவளித்தவர்கள் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்

by admin


அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பன்னீர்ச்செல்வத்துக்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நீக்கப்படவில்லை.
பொன்னையன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஓபிஎஸ் பன்னீர்ச்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூவத்தூருக்கு வந்து, சட்ட ஒழுங்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தத் திட்டமிடுகின்றனர் எனவும்  இதுகுறித்து தாங்கள் ஆளுநர், டிஜிபி மற்றும் உள்துறை செயலருக்குத் தெரிவித்துள்ளோம் என  நாடாளுமன்ற உறுப்பினர்  நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More