குமுதினி படுகொலையின் 37வது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆத்மார்த்தமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு குறிகாட்டுவானுற்கும் இடையே பயணம் செய்த 64 பயணிகளை உள்ளடக்கிய குமுதினிப் படகு வழிமறிக்கப்பட்டு, கடற்படையினரால் குறித்த படகில் பயணித்த சிறுபிள்ளை முதல் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனை நினைவு கூறும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் உருவமே படுகொலை நினைவேந்தல் பல்கலைக்கழக மாணவர்களால் அறிவிக்கப்பட்டதோடு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு உரிய நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை அவர்களுக்குரிய நீதி கிடைக்கவேண்டும் யாழ் பல்கலை மாணவர்களால் வலியுறுத்தப்பட்டது.