Home இலங்கையாழ்.பிரதம தபாலாக சுற்று வட்டத்தில் திருவள்ளுவர் சிலை!

யாழ்.பிரதம தபாலாக சுற்று வட்டத்தில் திருவள்ளுவர் சிலை!

by admin

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள பிரதம தபாலகத்திற்கு முன்பாகவுள்ள சுற்று வட்டத்தினை மீளமைத்து அழகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

ரில்கோ தனியார் விடுதியின் உரிமையாளர் திலகராஜின் நிதிப் பங்களிப்பு மீளவும் புனரமைக்கப்படவுள்ள சுற்றுவட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (28) மதியம் 12 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சுற்று வட்டத்தின் நடுவே திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டு அப்பகுதி அழகுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தூயநகரம் அழகிய மாநகரம் என்ற தொனிப்பொருளில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்றிட்டத்தில் யாழ் மாநகர சபைக்குட்பட்ட சுற்றுவட்டங்களை அழகுபடுத்தும் செயற்பாட்டின் நீட்சியாக இது Aமேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ரில்கோ தனியார் விடுதியின் உரிமையாளர் திலகராஜ் யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More