Home இலங்கைபசில் ராஜபக்ஸ வீடு சென்றால் – தம்மிக்க பெரேரா?

பசில் ராஜபக்ஸ வீடு சென்றால் – தம்மிக்க பெரேரா?

by admin

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸ, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த நேற்றிரவு பசில் ராஜபக்ஸ தனது கட்சிக்கு நெருக்கமான குழுவொன்றுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் அறியப்படுகின்றது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரே, அவர் தனது தேசியப் பட்டியல் ஊடான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

அவரது தேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்படும் எனவம் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More