Home இலங்கையாழ் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை!

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை!

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடமும், யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றமும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் மூலம் இணைந்து கொண்டுள்ளன. இவ் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று 08.06.22 ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முகாமைத்துவக்; கற்கைகள்; வணிக பீட சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் உடன்படிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர்கள், விரிவுரையளர்கள் போன்றவர்களுக்கும் பல்வேறு வழிகளில் நன்மையினை ஏற்படுத்தும். இப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் வாயிலாக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடமானது யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் நிலைபேறான அபிவிருத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பினை வழங்க முடியும்.

யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு தேவையான பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், போன்றனவற்றுக்கு வளவாளர்களாக முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் தொழிற்படுதலுடன் கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களை வகுப்பதில் உதவுதல். குறுகியகால டிப்ளோமா, மற்றும் சான்றிதழ் கற்கைகளினை அறிமுகப்படுத்துதல் மூலமாக அங்கத்தவர்களின் தொழில் சார் அறிவினை பெருக்கி கொள்ள உதவுதல். தொமிற்துறை நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற நெருக்கடி நிலையினை சிறந்த முறையில் முகாமை செய்வதற்குரிய தந்திரோபாய ஆலோசனைகளினையும் உதவிகளினையும் வழங்குதல், ஆராய்ச்சி மற்றும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்குதாரர்களாக செயற்படுதல் வணிகத்தின் வளர்ச்சி ஆராய்ச்சிகள் ஆலோசனைகள் முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. இவ்வாறான ஆலோசனைகள் தேவைப்படும் போது முகாமைத்துவக்; கற்கைகள் வணிக பீடத்தின் நிபுணர் குழு தேவையான ஆலோசனைகளை வணிக குழாமுக்கு வழங்குவதன் மூலம் தொழிற்துறையின் செயற்பாட்டினை மேம்படுத்த உதவும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More