இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகம் எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அவதானம் செலுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கைக்கான சீன தூதரக குழுவினருடன் நேற்று (08இ06.22) கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்