Home இலங்கைஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சாட்சியங்கள் பதிவு.

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. சாட்சியங்கள் பதிவு.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சாட்சியங்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த மாதம் 24ம் திகதி ஏழு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான மரண விசாரணைகள் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம். எம். ரியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் சாட்சியம் மற்றும் சடலத்தை முதலில் கண்ட அயல் வீட்டு பெண் ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதில் இரண்டாவது சாட்சியமான அயல் வீட்டு பெண்ணின் சாட்சியம் முழுமையாக பதிவு செய்யபடவில்லை. குறித்த பெண்ணின் மிகுதி சாட்சியமும் , ஏனைய சாட்சியங்களையும் அடுத்த வழக்கு தவணையான எதிர்வரும் 22ம் திகதி பதிவு செய்யப்படும் என நீதிவான் தெரிவித்தார்.

அதேவேளை சாட்சியங்களின் பாதுகாப்பு கருதி சாட்சிய பதிவுகள் நீதிவானின் பிரத்தியேக அறையில் வைத்தே பதிவு செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் கண் கண்ட சாட்சியமாக 12 வயது சிறுவன் ஒருவன் உள்ளார் எனவும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து குறித்த சிறுவனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More