யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரு பெண்களை வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் , மார்ட்டின் வீதி சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் (15.06.22) புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் பெண்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பின்னால் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் அவர்களை மோதி தள்ளி விட்டு , வேகமாக அங்கிருந்து தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்த இரு பெண்களையும் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.