பிரெக்சிற் விவகாரம் தாம் வசிக்கும் நாடுகளில் தமது உரிமைகளை கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்களை பாதிக்குமா என்பது குறித்த கணக்கெடுப்பு ஒன்றின் மூலம்) இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி கணக்கெடுப்பின் பிரகாரம், 83 சதவீதமானோர் பெரும் கவலை வெளியிட்டுள்ள அதேவேளை 3.8 சதவீதமானோர் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் , ஐஸ்லாந்து, மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பிரித்தானியர்களிடம் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 2 சதவீதமானோர் மாத்திரமே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.