Home இலங்கைநாட்டின் – பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து!

நாட்டின் – பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து!

by admin

நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அவசர கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மக்களின் எதிர்ப்பார்ப்பு தொடர்பில் அவதானம் செலுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜனநாயகக் கட்டமைப்பில் நாடாளுமன்றத்தைக் கூட்டி, சர்வதேச அளவில் நாட்டின் நன்மதிப்பைப் பாதிக்காத வகையில் முறையான ஆட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என மகாநாயக்கர் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக நாட்டில் தற்போது பல இடங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு முன்னெடுக்கப்படும் போராட்டகளத்தில் சொத்துக்களை சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இந்த நேரத்தில் நாட்டின் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ,மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More