Home இலங்கைரணிலுக்கு 140+ என்கிறார் வஜிர!

ரணிலுக்கு 140+ என்கிறார் வஜிர!

by admin

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 140க்கு அதிகமான வாக்குகளைப் பெறுவார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் என்ற ரீதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும், அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதுடன், சகலரதும் ஆசிர்வாதத்துடன் பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

இல்லாவிடின் இறுதி தருணத்தில் எவ்வித வாத விவாதங்களும் இல்லாமல் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யும் வாய்ப்பும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையை ஆசியாவின் அதி சிறந்த நாடாக மாற்றுவார். உலக நாடுகளில் சிறந்த நாடாகவும் மாற்றுவார்.

ஏனெனில் அரசியலில் 50 வருடம் அனுபவம் உள்ள தலைவர். அவர் மீது எவ்வித அவநம்பிக்கையும் பீதியும் கொள்ள கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More