இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியைத் தெரிவுச் செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (20) நாடாளுமன்றத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் அதிகபட்சமாக வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றுள்ளார்.
சபாநாயகர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 223 பேர் வாக்களித்துள்ள நிலையில் அதில் நான்கு வாக்குகள் செல்லுப்படியற்றதாக கணிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டலஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகளும் அனுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதனடிப்படையில் 52 வாக்குகள் வித்தியசாத்தில் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்
இந்த வாக்களிப்பில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளாது புறக்கணித்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது