தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கை ஒன்றினை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டில், ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த போது ஜப்பானிடம் , இலங்கை்கு வழங்கும் நிதி உதவிகளை கைவிடுமாறு கோாிக்கை விடுத்திருந்தாா் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் அந்த கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், தலைவர்களால் இழைக்கப்படும் தவறுகளுக்காக இலங்கை மக்களை தண்டிக்கக் கூடாது என பதிலளித்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.