Home இலங்கைதனியார் பேருந்துகள் நாளை இயங்கும்

தனியார் பேருந்துகள் நாளை இயங்கும்

by admin

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நாளை செவ்வாய்க்கிழமை  முதல் ஜம்பது வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ. கெங்காதாரன் தெரிவித்தார்.
யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய  இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 


இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் யாழ் மாவட்ட செயலக மேற்பார்வையில் எரிபொருளை பெற்றுத்தர அரச அதிபரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகளை  முதல் இயக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.


எரிபொருள் பெறுவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்றைய தினம் திங்கட்கிழமை  சேவையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More