Home இலங்கைவஜிர சத்தியப்பிரமாணம் – ஆளும் கட்சியின் பிரதம கொறடா – சபைத் தலைவர் நியமனம்!

வஜிர சத்தியப்பிரமாணம் – ஆளும் கட்சியின் பிரதம கொறடா – சபைத் தலைவர் நியமனம்!

by admin

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், வெற்றிடமாக இருந்த ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் நாடாளு மன்ற உறுப்பினர் பதவிக்கு, அக்கட்சியின் தவிசாளர் வஜிர ​அபேவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (27.07.22) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடா – சபைத் தலைவர் நியமனம்!

நாடாளுமன்ற சபைத் தலைவராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More