Home இலங்கை”சிஸ்ரம் மாறவேண்டும் என்றவர்களை காணோம்” நாளையும் இன்றேல் போராட்டம் முற்றுப்பெறும்.

”சிஸ்ரம் மாறவேண்டும் என்றவர்களை காணோம்” நாளையும் இன்றேல் போராட்டம் முற்றுப்பெறும்.

by admin

காலி முகத்திடல் போராட்டத்திற்கு, நாளைய தினம மக்கள் பிரசன்னம் இன்றேல், தானும் ஏனையவர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறவுள்ளதாக போராட்ட களத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், முதலில் இந்த போராட்ட களத்தில் இருந்த மக்கள் கூட்டத்தையும் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அவதானித்தால் போராட்டத்தின் தன்மையை பரிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிஸ்ரம் மாற வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஆட்சி மாறியதன் பின் செயலிழந்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் நாளை ஓகஸ்ட் 9 ஆம் திகதி, இந்த மண்ணில் இதுவரை நடத்திய போராட்டத்திற்கு பலன் கிடைக்காவிட்டால் நாளையுடன் போராட்டத்தை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More