பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டூடெற்ரே (Rodrigo Duterte ) மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சி செனட்டர் Antonio Trillanes IV வே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கு விபரங்களை வெளியிடுவதன் மூலம் குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிக்க முடியும் என செனட்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரகசியமான முறையில் பல மில்லியன் டொலர்களை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் வங்கியில் வைப்புச் செய்துள்ளதாகவும் காரணம் குறிப்பிட முடியாத பல சொத்துக்களை ஜனாதிபதி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் அடிப்படையில் சொத்துகள் குறித்த விபரங்களை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி வெளியிடவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.