Home சினிமாஇயக்குனா் லிங்குசாமிக்கு 6மாத சிறை

இயக்குனா் லிங்குசாமிக்கு 6மாத சிறை

by admin

இயக்குனா் லிங்குசாமிக்கு நீதிமன்றம் 6மாத கால சிறைத்தண்டணை விதித்துள்ளது. தமிழ் திரையுலகில் ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி அதன்பின்னா் ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தன.

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி ‘எண்ணி ஏழு நாள் ‘ என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என கூறி பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக அவர் வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இவ்வாறு இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More