Home இலங்கைபெத்தும் கேர்னருக்கெதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது

பெத்தும் கேர்னருக்கெதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது

by admin

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் இன்று (24) நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெத்தும் கேர்னர் இன்று தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலையான போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில், பொல்துவ சந்திக்கு அருகில் கடந்த  ஜூலை 13 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பெத்தும் கேர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக அவருக்கெதிராக நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More