தாம் தெரிவித்த கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அந்த கருத்துகளை மீளப்பெறுவதாகவும் தெரிவித்துள்ள ரஞ்சன் ராமநாயக்க சத்தியக்கடதாசியின் மூலம் நீதிமன்றத்தில் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தனது கருத்துகளால் பிரதம நீதியரசர் உட்பட சட்டத்துறையிலுள்ள அனைவருக்கும் அவமரியாதையை ஏற்படுத்தியமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துகளை வௌியிட மாட்டேன் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் தெரிவித்த கருத்துகளுக்காக கடந்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த கருத்துகளை மீளப்பெறப்போவதில்லை என நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்தமையினால், ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக மற்றொரு வழக்கும் தொடரப்பட்டிருந்தது.
அதேவேளை ஐ ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது 27ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் தானும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.