கொலம்பியாவில் ஊடகவியலாளா்கள் இருவா் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா். கொலம்பியாவின் கரீபியன் கடலோர பகுதியில் உள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் இயங்குகின்ற ‘சொல் டிஜிட்டர்’ என்ற இணையதள செய்தி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊடகவிலாளா்கள் இருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனா்.
லீனர் மோண்டிரோ ஆர்டிகா (வயது37), தலியா கான்ட் ரிராஸ் கேண்டில்லோ (39) ஆகிய இருவரும் திருவிழா ஒன்றை படம்பிடித்து, செய்தி சேகரித்து விட்டு அலுவலகத்துக்கு திரும்பிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தொியாத நபா்கள் அவா்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் போதிலும் பிரீபிரஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இருவரும் ஊடகவியலாளா்கள் என்ற அடிப்படையிலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும் அது தொடா்பில் விசாரணை நடத்துமாறும் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொலம்பியாவில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை மற்றும் படுகொலை சம்பவத்தால் ஊடகவியலாளா்கள் 768 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.