பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கான அவசரகால கடன் ஒப்பந்தமொன்றுக்கு இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பானது நாளை வெளியிடப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது.
70 ஆண்டுகளில் மோசமான பொருளாதார நெருக்கடியால் கடுமையான கடன் சுமையைக் கொண்டுள்ள இலங்கை, சா்வதேச நாணய நிதியத்திடமிருந்து மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கோரியிருந்தது. எனினும் இலங்கைக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் , மாதக்கணக்காக விலைகளும் உயர்வடைந்துள்ளன.
இலங்கைக்கு சென்றுள்ள சா்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கையிலிருப்பதை மேலும் ஒரு நாள் நீடித்துள்ளதாகவும் அரச அதிகாரிகளுடனாக கலந்துரையாடல்கள் நீடிப்பதாலேயே இந்த நீடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , நாளை ஊடக அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் சா்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.