பணமோசடி வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்கியுள்ளதாக இந்திய அமுலாக்கத்துறை கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இசிஆா் இல் உள்ள ஒரு பங்களாவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரேம குமார் என்னும் குணசேகரனுக்கு சொந்தமான இரண்டு விவசாய நிலங்களும் முடக்கப்பட்டதுடன், அவரது மகன் திலீப் என்னும் திலீப்பும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவா் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கடந்த 1999-இல் கொலை செய்ய முயன்ற வழக்கில் குணசேகரனுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்த நிலையில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இருவரும் தப்பிச் சென்று மாளிகை, விவசாய நிலங்கள் வாங்கி அங்கு குடியேறியதாக தொிவிக்கப்படும் நிலையில் இந்திய க்யூ பிரிவு காவல்துறையினா் இது தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.
குணசேகரன், தனது மகனுடன் சோ்ந்து போலி அடையாள அட்டைகள், ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு , சாரதி உரிமம், பான் காா்ட் ஆகியவற்றை தயாரித்திருப்பதும் தெரியவந்தது.
அத்துடன் குணசேகரனுக்கு சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பதும், கடந்த 2011-இல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டு விடுதலையானதும் குணசேகரன் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டு தலைமறைவாக வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, குணசேகரன் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க க்யூ பிரிவு காவல்துறையினா் அமுலாக்கத்துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மத்திய அமுலாக்கத்துறை குணசேகரன் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையிலேயே குணசேகரனுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியதாக அமுலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது குணசேகரன், அவரது மகன் திலீப் ஆகியோா் திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமில் உள்ளனா் என்பது குறிப்பிடதக்கது