163
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றிரவு 11.45 மணியளவில் இலங்கை திரும்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி ஜுலை 13 ஆம் திகதியன்று மாலைதீவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜுலை 14 ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற அவா் பின்னர் அங்கிருந்து ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றாா். மூன்று வாரங்களாக தாய்லாந்தில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
Spread the love