Home இலங்கைசமந்தா பவர் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்!

சமந்தா பவர் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்!

by admin

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜா எலவில், விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

உர பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை அவர் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எரிபொருள் நெருக்கடி மற்றும் உரமின்மை காரணமாக தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை சென்றுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து அவர் தனது இந்த பயணத்தில் ஆராய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More